Embedding Images from Instagram

Embedding Images from Instagram.

Posted in Uncategorized | Leave a comment

Useful plugins-Reposting

Useful plugins.

Posted in Uncategorized | Leave a comment

INNOVATIVE TOOL

INNOVATIVE TOOL.

Posted in Uncategorized | Leave a comment

Growth of WordPress

Growth of WordPress.

Posted in Uncategorized | Leave a comment

Information got from நான் கடவுள்

குளியல்.

Posted: 28 Aug 2011 03:09 AM PDT

ஒரு நாளைக்கு அதிக பட்சமாக இரண்டு முறை குளிக்கலாம்.
ஒரு நாளைக்கு மூன்று முறை குளித்தால் அது தரித்திரமாகும்.
பல வீடுகளில் பலர் ஞாயிற்று கிழமைகளில் குளிப்பதே இல்லை.
குளிக்காமல் சாப்பிடுவது தோஷத்தை உண்டாக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் “கூழானாலும் குளித்து குடி”  என்று சொன்னார்கள்.

ஞாயிற்று கிழமைகளில் பலர் சாயங்காலம் வெளியே குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ, விருந்துகளுக்கோ, பூங்காகளுக்கோ, கடற்கரைக்கோ, அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கோ செல்லும் போது சாயங்காலம் குளித்து விட்டு புத்துணர்ச்சியாக புறப்படலாமே என்று நினைக்கிறார்கள். அது மிகவும் அதிகமான தோஷத்தை கொடுக்கும். காலையிலேயே குளித்து விட வேண்டும்.

இன்னும் பல குடும்பங்களில், “இப்பவே குளிச்சிட்டு என்னத்த கிழிக்க போறீங்க?” என்று பாச மழை பொழியும் மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, பல ஆண்கள் ஞாயிற்று கிழமைகளில் குளிப்பதே இல்லை.

இமயமலையை சுற்றி ஒரு பௌர்ணமி கிரிவலம்.

Posted: 28 Aug 2011 02:48 AM PDT

இமயமலையை சுற்றி ஒரு பௌர்ணமி கிரிவலம் செல்லலாம் என்று நான் சொன்னால், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? உங்கள் mind voiceஐ நான் catch பண்ணி விட்டேன்.
ஆனால் இது உங்களால் முடியும் என்கிறேன்.
எப்படி? என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
அதற்க்கு முன் ஒரு கதை சொல்கிறேன்.
பள்ளி பருவத்தில் எல்லோரும் படித்த கதை தான். ஆனாலும் பலரும் மறந்திருப்போம்.
ஒரு அரசன் பெரும் பொருள் செலவில் சிவனுக்கு கோவில் கட்ட நினைக்கிறான். அதற்காக பல்வேறு வல்லுனர்களை எல்லாம் கலந்து ஆலோசித்து கோவில் கட்ட ஆரம்பிக்கிறான்.
அதே சமயத்தில் ஒரு ஏழை சிவ பக்தர் தன் மனதிலேயே சிவனுக்கு கோயில் கட்டுகிறார்.
இருவருமே ஒரே சமயத்தில், சிவனுக்கு கோவில் கட்டி, ஒரே நாளில் கும்பாபிஷேகத்தை செய்ய முடிவெடுக்கிறார்கள்.
கும்பாபிஷேகத்திற்கு, முந்தைய நாள் இரவில் அரசனின் கனவில் சிவன் அசரீரியாக சொல்கிறார், “மன்னனே, உன் கும்பாபிசேகத்தை வேறு ஒரு நாளில் நீ வைத்துக்கொள். என் பக்தன் ஒருவன் அவன் மனதிலேயே எனக்கு கோவில் கட்டி நாளை கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்திருக்கிறான். நான் நாளை அங்கே செல்ல இருக்கிறேன்.” என்று.
இப்போது நீங்கள் கேட்கலாம், ஒரே சமயத்தில் இறைவனால் இந்த இரண்டு இடங்களுக்கும் செல்ல முடியாதா? என்று.
பெரும் பொருள் செலவு செய்வது பெரிய விஷயம் அல்ல. மனத்தால் இறைவனை எந்த அளவுக்கு நினைக்கிறோம் என்பது தான் முக்கியம். அரசனை விட அந்த சிவ பக்தரின் பக்தி தான் சிறந்தது. அதனால் தான் அவரின் மன கோவிலுக்கு சிவன் முதலிடம் கொடுத்தார்.
சரி நம் விசயத்திற்கு வருவோம்.
உடலின் சக்தியை விட மனதிற்கு சக்தி அதிகம்.
உங்கள் மனதில் இமய மலையையே சிவனின் வடிவமாக நினைத்து, கோடிக்கணக்கான ஜீவராசிகளில், நீங்களும் ஒருவர் என்ற உண்மையை உணர்ந்து, உங்களுக்கு முன் கோடிக்கணக்கான பக்தர்கள், உங்களுக்கு பின் கோடிக்கணக்கான பக்தர்கள், அவர்கள் எல்லோருக்கும் நடுவில் நீங்கள் இமயமலையை கிரிவலம் வருவதாக மனக்கண்ணில் நினைத்து பாருங்கள்,
 நீங்கள் பௌர்ணமி அன்று இமயமலையை கிரிவலம் வந்து கொண்டு இருப்பீர்கள்.
உங்கள் மனதிற்கு சக்தி அதிகம் என்பதை நீங்கள் உணர்ந்தால் உங்களால் எல்லா நல்ல செயல்களையும் செய்து விட முடியும்.

உண்மையான மகான் யார்?

Posted: 28 Aug 2011 02:08 AM PDT

தற்போது பலர் கேட்கிறார்கள், உண்மையான மகான்களை எப்படி தெரிந்து கொள்வது? என்று.
இங்கே படத்தில் இருக்கும் ஷிரிடி சாய் பாபா வை பாருங்கள்.(இங்கே இடம் பெற்று இருக்கும் அனைத்தும் சாய் பாபா வின் உண்மையான புகைப்படங்கள்.) இவரை போல் எளிய தோற்றமும், பண ஆசை சிறிதும் இல்லாதவர்கள் தான் உண்மையான மகான்கள்.
உண்மையான மகான்கள், வங்கியில் கோடிகணக்கில் பணம் வைத்திருக்க மாட்டார்கள், கோடிக்கணக்கான மதிப்பில் நிலம் வைத்திருக்க மாட்டார்கள். அவர்களின் படுக்கை அறையில் தங்க கட்டிகள் இருக்காது. வெள்ளி கட்டிகள் இருக்காது. நவரத்தினங்கள் இருக்காது. தங்களை பற்றி தாங்களே விளம்பரம் செய்ய மாட்டார்கள்.
இவரைப்போல் அல்லாதவர்கள் யாரும் மகான்கள் அல்ல.

கண் மை.

Posted: 28 Aug 2011 01:37 AM PDT

நம் நாட்டில் இயற்க்கை பொருட்களால் தயாரிக்கப்படும், கண் மை இடும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. அதற்க்கு பதிலாக வெளிநாட்டு நிறுவனங்களின் அழகு சாதன பொருட்களை மக்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். வெளி நாட்டு நிறுவன பொருட்களுக்கு நான் எதிரி அல்ல. ஆனால் நம் நாட்டு இயற்க்கை பொருட்களின் மதிப்பு என்ன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கண் மை, குழந்தைகளுக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்கவும், பெண்களின் கண்ணழகை அதிகப்படுத்தி காட்டவும் உபயோகிக்கப்படுகின்றன.
 இதில் மேலும் பல மறைக்கப்பட்ட நன்மைகள் இருக்கின்றன.
 கண் மை, இட்டுக் கொண்டால், பல் வேறு விதமான் தீய சக்திகளிடம் இருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம் உடலில் தீய சக்திகள் இருந்தாலும் அதை இந்த கண் மை வெளியேற்றி விடும்.
செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் மற்றும் பல தீய சக்திகளால் பாதிக்க பட்டவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த கண் மையை, நெற்றி பொட்டில் இட்டுக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பல் வேறு விதமான் தீய சக்திகளிடம் இருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம் உடலில் தீய சக்திகள் இருந்தாலும் அதை இந்த கண் மை வெளியேற்றி விடும்.

உணவு பரிமாறும் முறை.

Posted: 28 Aug 2011 01:19 AM PDT

உணவை பரிமாறும் போது தண்ணீர், இனிப்பு வகைகள், பொரியல், கூட்டு, அப்பளம், வடகம், துவையல், பழம், இவற்றை பரிமாறியபின் கடைசியில் தான் சாதம் பரிமாற வேண்டும்.
சாதத்தை முதலில் பரிமாற கூடாது.

வாசல் தெளிக்கும் முறை, சமைக்கும் முறை.

Posted: 28 Aug 2011 01:10 AM PDT

பெண்கள் தினமும் குளித்து விட்டு தான் வாசல் தெளித்து, கோலமிட வேண்டும்.
குளித்து விட்டு தான் சமைக்க வேண்டும். அது தான் சரியான முறை. அப்போது தான் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

வேப்பெண்ணை குளியல்

Posted: 28 Aug 2011 12:56 AM PDT

செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், மற்றும் பல தீய சக்திகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் – புதன் கிழமையன்றும், சனிக்கிழமையன்றும்
பெண்கள் – செவ்வாய்க்கிழமையன்றும், வெள்ளிக்கிழமையன்றும்
நல்லெண்ணைக்கு பதிலாக வேப்பெண்ணையை தேய்த்து குளிக்கலாம்.

கெட்ட கனவு நீங்க.

Posted: 28 Aug 2011 12:36 AM PDT

சிலருக்கு கெட்ட கனவுகள்  அல்லது கனவுகளில் தீய சக்திகளின் தொந்தரவு அடிக்கடி இருக்கும். அப்படி இருப்பவர்கள், செவ்வாய்க்கிழமை மற்றும், வெள்ளிக்கிழமைகளில், இரவில் படுக்க செல்லும் முன், எலுமிச்சம்பழ சாற்றை முகத்தில் தடவிக்கொண்டு படுக்கலாம்.
Posted in Uncategorized | Leave a comment

VERIFICATION

Posted in Uncategorized | Leave a comment

VERIFICATION

google-site-verification: google6d3a998e2938cd7e.html

Posted in Uncategorized | Leave a comment